இளைய பெருமாள் பட்டியில் பணியின் போது வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழப்பு.
Karur King 24x7 |29 Aug 2024 11:04 AM GMT
இளைய பெருமாள் பட்டியில் பணியின் போது வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழப்பு.
இளைய பெருமாள் பட்டியில் பணியின் போது வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழப்பு. கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, கீழ சக்கரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் அரப்பலீஸ்வரன் வயது 58. இவர் பிறவியிலேயே வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக இவருக்கு அவ்வப்போது வலிப்பு நோய் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் ஆகஸ்ட் 28ஆம் தேதி காலை 7 மணி அளவில், இவரது சகோதரர் கருப்பசாமி என்பவரது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, திடீரென வலிப்பு ஏற்பட்டதால் மயங்கி விழுந்தார் அரப்பளீஸ்வரன். உடனடியாக அவரை குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மருத்துவர்கள் அவரை பரிசோதித்து விட்டு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கருப்பசாமி அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த அரப்பலீஸ்வரன் உடலை உடற்கூறு ஆய்வுக்காக குளித்தலை அரசு மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சிந்தாமணிப்பட்டி காவல்துறையினர்.
Next Story