நிலா நகரில் மது போதைக்கு அடிமையானவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.
Karur King 24x7 |29 Aug 2024 11:23 AM GMT
நிலா நகரில் மது போதைக்கு அடிமையானவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.
நிலா நகரில் மது போதைக்கு அடிமையானவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு. கரூர் மாவட்டம், தாந்தோணிமலை, வடக்கு கணபதிபாளையம் அருகே உள்ள நிலா நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் வயது 48. இவர் அண்மைக்காலமாக மது போதைக்கு அடிமையாக இருந்ததால், நாள்தோறும் மது அருந்தி வந்தார். இந்நிலையில் ஆகஸ்ட் 27ஆம் தேதி இரவு 10:40- மணியளவில், அவரது வீட்டில் மது போதையில் இருந்த அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் . அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த சரவணன் மனைவி சசிகலா வயது 43 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் உயிரிழந்த சரவணன் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தாந்தோணிமலை காவல்துறையினர்.
Next Story