வீ.ஜி.விகாஸ் பப்ளிக் பள்ளி மாணவர்கள் சாதனை.
Rasipuram King 24x7 |29 Aug 2024 12:39 PM GMT
வீ.ஜி.விகாஸ் பப்ளிக் பள்ளி மாணவர்கள் சாதனை.
சேலம், சென்னை சில்க்ஸ் வளாகத்தில் கடந்த 26. 8.24 திங்களன்று லிட்டில் கிருஷ்ணா 1.2 நோபல் உலக சாதனை நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் வீ .ஜி விகாஸ் பப்ளிக் பள்ளியில் மழலையர் கல்வி முதல் ஆறாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் பங்கு பெற்று நான்கு நிமிடங்களில் கிருஷ்ணன்_ ராதை போன்று அலங்கரித்து சாதனை படைத்தனர் .மேலும் சாதனை படைத்த மாணவ மாணவிகளின் பெயர் "நோபல் உலக சாதனை" புத்தகத்தில் இடம் பெற்றது. இத்தகவலை அதன் இயக்குநர் Dr. ஹேமலதா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களை ஊக்குவித்த பள்ளி ஓவிய ஆசிரியை விணுப்பிரியாவையும் பள்ளி முதன்மைச் செயல் அலுவலர் திருநாவுக்கரசு, நிர்வாக அலுவலர் வினோத்குமார் மற்றும் பள்ளி முதல்வர் கணேஷ் ஆகியோர் பாராட்டினர் .
Next Story