நாளை திருமயம் பகுதிகளில் மின் நிறுத்தம்!
Pudukkottai King 24x7 |30 Aug 2024 2:24 AM GMT
மின் நிறுத்தம்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (ஆக. 31) மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என உதவிச் செயற்பொறியாளர் (பொ) கீதாஞ்சலி அறிவித்துள்ளார். இதனால் மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: திருமயம், மணவாளங்கரை, இளஞ்சாவூர், ராமச்சந்திரபுரம்,கன்னங்காரைக்குடி, ஊனையூர், சவேரியார்புரம், குளத்துப்பட்டி, பட்டணம், மலைக்குடிப்பட்டி, மாவூர், கோனாப்பட்டு, தேத்தாம்பட்டி, துளையானூர், ஆதனூர், வாரியப்பட்டி, கொல்லக்காட்டுப்பட்டி, ராங்கியம், கண்ணனூர், மேலூர், அம்மன்பட்டி, அரசம்பட்டி, थी. லெட்சுமிபுரம், ஏனப்பட்டி, விராச்சிலை, பெல் வளாகம்.ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளனர்.
Next Story