வேளாண் பொருட்கள் குறித்த கண்காட்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
Karur King 24x7 |30 Aug 2024 6:44 AM GMT
வேளாண் பொருட்கள் குறித்த கண்காட்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
வேளாண் பொருட்கள் குறித்த கண்காட்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த கூட்டத்தில் பங்கேற்க விவசாயத்துறை வல்லுநர்கள், கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வரும் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். அவ்வாறு வரக்கூடிய அனைவருக்கும் வேளாண் துறை சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள், மேலும் வேளாண் தொழிலை சிறப்பாக மேற்கொள்வதற்காக தேவைப்படும் உதவிகள் குறித்த விளக்கக் கண்காட்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் தோட்டக்கலை, மழை பெய்தல் துறை செயல்படுத்தும் திட்டங்கள், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பல்வேறு உபகரணங்களை குறித்த விளக்கங்களும், கால்நடைகளுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் குறித்தும், வேளாண்மை துறை சார்பில் வேளாண் கருவிகள், மற்றும் தேவைப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள், சிறப்பாக விவசாயம் செய்து தயார் செய்யப்பட்ட காய்கறி உள்ளிட்ட பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
Next Story