ஆறுமுத்தாம்பாளையத்தில் புதிய மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி.
Palladam King 24x7 |30 Aug 2024 7:31 AM GMT
மாவட்ட கவுன்சிலர் கொங்கு ராஜேந்திரன் திறந்து வைத்தார்.
பல்லடம் தாலுகா ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியில் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.குடிநீர் பற்றாக்குறை உள்ளதால் மேல்னிலை குடிநீர் தேக்க தொட்டி வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். இதனை அடுத்து மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் கொங்கு ராஜேந்திரன் நிதியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டி முடிக்கப்பட்டது.முடிக்கப்பட்ட தொட்டியினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விதமாக திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட கவுன்சிலர் கொங்கு ராஜேந்திரன் தொட்டியினை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.இந்நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் பாரதி சின்னப்பன் வார்டு உறுப்பினர் முத்துக்குமாரசாமி மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்டத் தலைவர் ராமசாமி மேற்கு மண்டல செயலாளர் பொன்னுச்சாமி மற்றும் கதிர்வேல் கணேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story