வாலிபரிடம் செல்போன்கள் திருடிய திருநம்பி கைது
Salem King 24x7 |30 Aug 2024 8:39 AM GMT
போலீசார் நடவடிக்கை
சேலம் மெய்யனூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 30). இவர் நேற்று புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு டீக்கடை முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த 22 வயதுடைய ஒருவர் அவரது மோட்டார் சைக்கிளின் டேங்க் கவரில் இருந்த 2 செல்போன்களை நைசாக திருடினார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை பிடித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகே உள்ள அன்பு நகர் பகுதியை சேர்ந்த அஞ்சலி என்கிற தினேஷ்குமார் (22) என்பது தெரியவந்தது. திருநம்பியான அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story