இந்தியா முழுவதும் ஜாதி வாரிய கணக்கெடுப்பு நடத்த வேண்டும்
Dindigul King 24x7 |30 Aug 2024 8:46 AM GMT
இந்தியா முழுவதும் ஜாதி வாரிய கணக்கெடுப்பு நடத்த வேண்டும் -என மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வேண்டுகோள் RM காலனியில் நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் பேச்சு
அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று சிபிஎம் சார்பில் திண்டுக்கல் ஆர்.எம் காலணியில் சிறப்பு மாநாடு நடத்தப்பட்டது. இதில் சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், சிபிஎம் மாநில செயற்குழு பாலபாரதி மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். மேலும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன், ஆதித்தமிழர் பேரவை மாநிலத் தலைவர் ஜக்கையன் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் பேசும்போது, "உச்ச நீதிமன்றம் மூலம் உறுதி செய்யப்பட்ட அருந்ததியருக்கான 3 சதவீத உள் ஒதுக்கீடு மட்டும் வெற்றி அல்ல. இந்த இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும். அதன் பலன்களை உங்கள் பெறுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் தொடர்ந்து போராடும். எத்தனையோ இடையூறுகளை சந்தித்த போதிலும் நம்முடைய கட்சியினர் பின்வாங்கவில்லை. பட்டியல் இன மக்கள் சமூக கொடுமைகளுக்கு ஆளானது உண்மைதான். எல்லா சமயத்திலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்க முடியாது. குறிப்பாக ஜம்மு மற்றும் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. உரிமைகளை பெறுவதற்கான சட்டத்தோடு வெற்றி பெற்றதுடன் நின்று விடக் கூடாது. அதனை முழுமையாக செயல்படுத்தி பலனை பெற வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடும் கட்சி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை இழிவு படுத்தினார்கள். அதை நாங்கள் இழிவாக கருதவில்லை. முனைவர் பட்டம் பெற்றதாக கருதுகிறோம். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஒதுக்கீட்டில் மிகப் பிற்படுத்தப்பட்டோருக்ககு ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு ஏன் வழங்கக்கூடாது. உச்ச நீதிமன்றம் வரலாறு காணாத சிறப்பான தீர்ப்பு வழங்கி உள்ளது. கடைக்கோடியாக வேலை பார்த்து வரும் தூய்மை பணியாளரின் பிள்ளைகள் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரி வர வேண்டாமா என்பதுதான் கேள்வி அடுத்த சமூகத்தை போல் ஒதுக்கீட்டில் உள்ள சலுகைகளை அனுபவிக்க வேண்டும். அதற்குத்தான் இந்த உள் ஒதுக்கீடு. உள் ஒதுக்கீடு வழங்கக் கூடாது என பல உயர் நீதிமன்றங்கள் மூன்று நீதிபதி கொண்ட உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியுள்ளது அதையும் மீறி தற்பொழுது ஏழு பேர் கொண்ட நீதிபதி குழு பல கட்ட ஆராய்வுக்கு பின்பு தற்பொழுது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி உள்ளனர். மலக்குழிகள் மரணம் தற்போதும் தொடர்கிறது. பல்வேறு அரசு பணிகளுக்கும் கடும் போட்டி ஏற்படும் நிலையில் தூய்மை பணிக்கு 100 சதவீதம் அருந்ததியினருக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. உச்ச நீதிமன்றம் தற்போது அளித்துள்ள தீர்ப்பு 15 ஆண்டுகால ஆய்வுக்குப் பின் கிடைத்துள்ளது. அரசாங்கம் வழங்கக்கூடிய இட ஒதுக்கீட்டில் 19 சதவீத இட ஒதுக்கீட்டில் அருந்ததியர் என மூன்று சதவீதத்தை மட்டும் தானே கேட்கின்றோம் இது வழங்குவதில் என்ன தயக்கம் உள்ளது திருமாவளவன் அருந்ததியர் இட ஒதுக்கீட்டில் முன்பு ஆதரவு தெரிவித்த நிலையில் தற்போது எதிர்ப்பது குறித்து அவரிடம் நேரடியாகவே அவரது பிறந்த நாள் விழாவில் பேசியுள்ளேன். இந்தியா முழுவதும் சாதிய அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். உள் ஒதுக்கீடு நாங்கள் தான் பெற்று தந்தோம் இதற்கு மோடி அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என கூறும் பிஜேபியை சேர்ந்தவர்கள் உடனடியாக ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மோடியை வலியுறுத்த வேண்டும் இட ஒதுக்கீடு என்பது சர்வலோக நிவாரணி கிடையாது என்று எங்களுக்கும் தெரியும் உழபவனுக்கு நிலம் சொந்தமாகப்பட வேண்டும், கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் ஏழை விவசாயி விவசாயத் தொழிலாளர்கள் கையில் நிலம் கிடைக்கிறதோ அப்பொழுதுதான் சமுதாயத்தில் அடிப்படை மாற்றம் ஏற்படும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இதர தொழிலாள வர்க்கங்களையும் ஒருங்கிணைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராடி வருகிறது. பாஜக இன்னும் என்னவெல்லாம் செய்ய உள்ளார்கள் என்று தெரியவில்லை வக் போர்டு சட்டம், தலித் மக்களுக்கான சட்டம் ஆகியவற்றை நீர்த்துப் போக செய்கின்றனர். மத்திய அரசு அனைத்து தலித், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், என அனைத்து மக்களின் சலுகைகளை பறித்து சனாதன ஆட்சியை நிலை நிறுத்துவது தான் குறிக்கோளாக உள்ளனர். இவர்களுக்கு எதிராகவே நாம் நிற்க வேண்டும் நமக்குள் இருக்கும் சகோதரத்துவ சண்டையை நிறுத்த வேண்டும். அருந்ததியர் சட்டத்தை கொண்டு வந்த தமிழ்நாடு அரசுக்கு இந்த நேரத்தில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக முதல்வருக்கு ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன் மூன்று சதவீத அருந்ததியர்களை காண சட்டம் இயற்றப்பட்டு அதனை முழுமையாக செயல்படுத்த வேண்டும் முடியாமல் விட்டால் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் உருவாக்கப்பட்ட இச்சட்டம் பயன் அளிக்காமல் போய்விடும்" என தெரிவித்தார்.
Next Story