ஜோலார்பேட்டை பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற தொகுதிக்கான நியமனம் மனு பெறுதல் கூட்டம் நடைபெற்றது
Tirupathur King 24x7 |30 Aug 2024 12:39 PM GMT
ஜோலார்பேட்டை பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற தொகுதிக்கான நியமனம் மனு பெறுதல் கூட்டம் நடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மேற்கு மாவட்ட ஜோலார்பேட்டை பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற தொகுதிக்கான தலைவர்,செயலாளர் பொறுப்புகளுக்கு நியமனம் மனு பெறுதல் கூட்டம் நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பத்தூர் மேற்கு மாவட்ட ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கான, தொகுதி தலைவர்,செயலாளர்,மற்றும்,மகளிர் தலைவி,செயலாளர், பொறுப்புகளுக்கு நியமனம் மனு பெரும் கூட்டம் திருப்பத்தூர் மேற்கு மாவட்ட செயலாளர் எபி சிவா தலைமையில் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிக்கு பாலு, பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். ஒற்றுமையாக கடுமையாக செயல்பட்டால் லட்சியத்தை அடையமுடியும் கருத்து வேறுபாடுகள் இன்றி செயல்படவும் இந்த ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெறவும் கட்சியை பலப்படுத்தவும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று பேசினார் பின்னர் தொகுதி தலைவர், செயலாளர், மற்றும் மகளிர், தலைவர், செயலாளர், தேர்வுக்கான நியமனம் மனு பெற்று கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் மாநில வன்னியர் சங்க செயலாளர் டி கே ராஜா. மாநில செயற்குழு உறுப்பினர் நடராஜன் மாநில மகளிர் சங்க தலைவி நிர்மலா ராசா மற்றும் ஜோலார்பேட்டை பாட்டாளி மக்கள் கட்சி நகர செயலாளர் ஞானமோகன் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் குட்டிமணி மாவட்டத் துணைச் செயலாளர் தமிழ் அன்பு சக்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் பாட்டாளி மக்கள் கட்சி யினர் திரளானோர் பங்கேற்றனர்
Next Story