திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டமன்ற பொதுக் கணக்கு குழுவினர் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டமன்ற பொதுக் கணக்கு குழுவினர் ஆய்வு
திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டமன்ற பொதுக் கணக்கு குழுவினர் ஆய்வு
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டமன்ற பொதுக் கணக்கு குழுவினர் ஆய்வு ஆய்வு குழு தலைவராக காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வபெருந்தகை தலைமையில் உறுப்பினர்களாக ராமசந்திரன், எழிலரசன், சந்திரன், சேகர், ஜெயராம், அக்ரி கிருஷ்னமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.அப்போது சுற்றுலா மாளிகையில் காவல்துறை வரவேற்பு வணக்கத்தை பெற்று கொண்டு மாளிகை உள்ளே சென்ற போது ஆய்வு குழு தலைவர் செல்வபெருந்தகையிடம் ஒன்னும் இல்லாத திருப்பத்தூர்க்கு எதுக்கு னா வந்தீங்க என்று கூறினார். அப்போது அருகில் இருந்த திருப்பத்தூர் எம்.எல்.ஏ நல்லதம்பி ஒன்னும் இல்லாத திருப்பத்தூர் என்று சொல்றீங்க என்று கேட்டபோது நான் நேராக தான் சொல்கிறேன். திருப்பத்தூர்ல் ஒன்றும் இல்லை என்று கூறி உள்ளே சென்றார் அதனை தொடர்ந்து ஆதிதிராவிட மாணவிகள் தங்கும் விடுதியில் ஆய்வுக்கு சென்ற போது செல்வபெருந்தகை இன்றைக்கு யாரை சஸ்பென்ட் செய்யலாம் என்று கேட்டு உள்ளே சென்று மாணவிகள் விடுதியில் ஆய்வு உணவு, இருப்பிடம் குறித்து ஆய்வு செய்தார். அப்போது அறையை தூய்மையாக வைத்து கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறி சென்றார். அதனை தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்தினார். அப்போது ART சென்டர் என்று இருந்த நிலையில் ART என்றால் என்ன என்று மருத்துவ கூடுதல் இயக்குனர் கண்ணகியிடம் செல்வ பெருந்தகை கேட்டபோது எதுவும் தெரியாமல் விழி பிதுங்கி நின்றார். அதன் பிறகு அதன் பிறகு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கூறினார். பின்னர் மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்ட போது மருந்தத்தில் விலை உயர்ந்த மருந்துகள் எவ்வளவு உள்ளது. மருந்துகள் அனைத்தும் கவர் செய்து கொடுக்கவில்லை ஏன் என்றும் கேள்வி எழுப்பி, பின்னர் மருந்தக குடோனுக்கு சென்று ஸ்டாக் எவ்வளவு உள்ளது என்று கேட்ட செல்வபெருந்தகை உடன் வந்த உறுப்பினர்களை ஆய்வு செய்ய கூறினார். அப்போது அனைத்து மருந்துகளும் பராமரிக்கும் கணக்கை விட அதிகம் இருந்த காரணத்தினால் மருத்துவர்கள் வாய் அடைத்து போய் நின்ற நிலையில் எழிலரசன் எம்.எல்.ஏ நீங்கள் கவலை படாதீர்கள் நன்றாக பணியாற்றுகிறார்கள் என்று சொல்லி விட்டு போகிறோம் என்று கூறினார். பின்னர் மருந்துகள் அதிகம் உள்ளது குறித்து எனக்கு விளக்கம் கொடுங்கள் என்று மருத்துவ இணை இயக்குநர் கண்ணகியிடம் கூறி சென்றார். அதனை தொடர்ந்து ஜோலார்பேட்டை அடுத்த குடியானங்குப்பம் கிராமத்தில் கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தற்பகராஜ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்...
Next Story