டாக் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் ஒருவர் பலி
Thoothukudi King 24x7 |30 Aug 2024 1:44 PM GMT
தூத்துக்குடியில் டாக் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4பேர் படுகாயம் அடைந்தனர்
.தூத்துக்குடி முத்தையாபுரத்தில் டாக் (Tuticorin Alkali Chemicals and Fertilizers Limited) தொழிற்சாலை உள்ளது. இங்குள்ள அமோனியா பிளாண்டில் 100க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இன்று பிற்பகல் 3 மணிளவில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தில் மஞ்சள்நீர்காயல், வடக்கு தெருவைச் சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன் மகன் ஹரிஹரன் (24) என்பவர் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மேலும் 4பேர் காயம் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்து ஸ்பிக், மற்றும் டாக் நிறுவன தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. சம்பவ இடத்தை தூத்துக்குடி டவுண் ஏஎஸ்பி கேல்கர் சுப்ரமண்ய பால்ச்சந்திரா நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story