கல்லூரியில் புதுமை கண்டுபிடிப்பு மாநாடு: ஆட்சியர் பங்கேற்பு
Thoothukudi King 24x7 |31 Aug 2024 2:52 AM GMT
மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் புதுமை கண்டுபிடிப்பு மாநாடு: ஆட்சியர் பங்கேற்பு
தூத்துக்குடி வாகைக்குளம் செயின்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் தமிழக அரசின் ஸ்டார்ட் அப் இணைந்து புதுமை கண்டுபிடிப்பு மாநாடு 1.0 நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் பங்கேற்று சிறப்பித்தார். இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், ஐ.ஏ.எஸ்., தலைமை தாங்கினார். தமிழக அரசின் திட்ட தலைமை அதிகாரி ராகுல் வரவேற்புரையாற்றினார். ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், மாணவ செல்வங்கள் தங்களது தனி திறமை மூலம் தொழில்முனைவோராக மாறி வருகின்றனர். தமிழக அரசின் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஊக்கம் அளித்து வருகிறது என்று கூறினார். விழாவில், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் பேசுகையில், "தமிழக அரசு உயர்கல்வி மாணவர்களுக்கு ஸ்டார்ட் அப் மூலமாக புதுமை கண்டுபிடிப்புகளுக்கு நிதி அளித்து ஊக்கப்படுத்தி வருகிறது. இதன் மூலம் ஸ்டார்ட் அப் மூலமாக மாணவர்கள் தொழில் தொடங்கி பலருக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகின்றனர். இதனை தொழில் முனைவில் ஆர்வம் உள்ள மாணவர்கள் அரசின் திட்டத்தை நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
Next Story