காதல் திருமணம் செய்த கல்லூரி ஜோடி காரில் கடத்தல் தக்க சமயத்தில் காதல் ஜோடிகளை மீட்டு

காதல் திருமணம் செய்த கல்லூரி ஜோடி காரில் கடத்தல் தக்க சமயத்தில் காதல் ஜோடிகளை மீட்டு
காதல் திருமணம் செய்த கல்லூரி ஜோடி காரில் கடத்தல் தக்க சமயத்தில் காதல் ஜோடிகளை மீட்டு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி கிருஷ்ணவேணி மற்றும் கல்லூரி மாணவன் பழனிச்சாமி ஆகிய இருவரும் காதலித்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் முடித்துள்ளனர். இருவரும் இருவேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இன்று பெண்ணின் குடும்பத்தினரான பெற்றோர்களான ஜெயக்குமார்-அய்யம்மாள் மற்றும் உறவினர்களான சிவா, மணிகண்டன், வேல்முருகன் ஆகிய ஐந்து நபர்கள் தாயில்பட்டி பகுதிக்குச் சேர்ந்து சொந்த பந்தங்கள் கூடி பெரிய அளவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என ஆசை வார்த்தை கூறி காரில் ஏறச் சொல்லி வற்புறுத்தி உள்ளார். இந்நிலையில் அந்தப் பெண் ஏற மறுக்கவே வலுக்கட்டாயமாக புதுமண ஜோடிகளை ஏற்றிக்கொண்டு சென்ற நிலையில் அங்குள்ளவர்கள் வெம்பக்கோட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே ஜோடிகளை ஏற்றி சென்ற நிலையில் காரை தாயில்பட்டி பகுதி மக்கள் மற்றும் காவல் துறையினர் பின்னே சினிமா பாணியில் புரட்டி சென்றுள்ளனர். இந்த நிலையில் திருவேங்கடம் நோக்கி வந்த நிலையில் தென்காசி மாவட்ட காவல்துறையினரின் கட்டுப்பாட்டு அறையிலிருந்து இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது என தகவல் கிடைக்கவே திருவேங்கடம் மற்றும் குருவிகுளம் காவல்துறையினர் தயார் நிலையில் இருக்கவே கார் ஆனது திருவேங்கடத்தில் இருந்து குருவிகுளம் நோக்கி பாய்ந்து வரவே குருவிகுளம் காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார் தலைமையிலான காவல்துறையினர் வந்து காரை மடக்கிய போது உள்ளே புதுமணத் தம்பதியினர் இல்லாததை கண்டு காவல்துறையினர் ஒரு கணம் வியப்பில் ஆழ்ந்த நிலையில் வரும் வழியிலேயே காவல்துறையினர் இருப்பதை அறிந்து கொள்ளலாம் பகுதியில் புதுமணத் தம்பதியினரை இறக்கிவிட்டு வந்ததாக கூறப்படும் நிலையில் இவர்கள் 5 பேரையும் குருவிகுளம் காவல்துறையினர் பிடித்து வெம்பகோட்டை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். குருஞ்சாங்குளம் பகுதியில் வழியிலே இறக்கி விட்ட புதுமண ஜோடிகளை அங்குள்ள பெரியவர் மீட்டு திருவேங்கடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து பின்னர் அவர்களும் வெம்ப கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் காவல் துறையினர் சுதாரிப்பாக இருந்ததின் காரணமாக புதுமண ஜோடிகளை கடத்தலில் ஈடுபட்டவர்கள் பிடிபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மேலும் இவர்கள் எதற்காக கடத்தினார்கள் என்றும் கடத்தல் குறித்தும் விசாரணையானது வெம்பகோட்டை காவல் நிலையத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. மேலும் வரும் வழியில் தவித்துக் கொண்டிருந்த திருமண ஜோடிகளை பத்திரமாக ஏற்றுக்கொண்டு காவல்துறையிடம் ஒப்படைத்த கருப்பசாமி என்ற புதிய வரை காவல்துறையினர் பாராட்டினர்.
Next Story