தூய்மை பணியாளர் மர்மமான முறையில் உயிரிழப்பு போலீசார் விசாரணை
Dindigul King 24x7 |31 Aug 2024 4:57 AM GMT
குளத்தூரில் அரசு அனுமதி இல்லாமல் நடைபெற்று வந்த தனியார் விடுதியில் உள்ள கழிப்பறையை சுத்தம் செய்த தூய்மை பணியாளர் மர்மமான முறையில் உயிரிழப்பு போலீசார் விசாரணை
திண்டுக்கல் முனிசிபல் காலனியை சேர்ந்தவர் கணபதி வயது 65 தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஏற்கனவே உயிரிழந்த நிலையில் இவருக்கு வள்ளி என்ற மகளும் மற்றும் முத்துராஜ் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் திண்டுக்கல் அருகே உள்ள குளத்தூரில் தனியாருக்கு சொந்தமான கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் மாத வாடகைக்கு அறை எடுத்து கல்லூரி மாணவர்கள் தங்கி வருகின்றனர். இந்த விடுதியில் உள்ள கழிவறைகளை வாரம் தோறும் சுத்தம் செய்யும் பணியில் தூய்மை பணியாளர் கணபதி ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் விடுதியில் உள்ள கழிவறையை ஆசிட் ஊற்றி சுத்தம் செய்யும் பணியில் கணபதி ஈடுபட்டார், அப்பொழுது திடீரென கணபதி மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் கணபதியை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தூக்கி வந்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர் கணபதி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை ஏற்க மறுத்த கணபதியின் உறவினர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குவிந்தனர், இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது. இதனிடையே கணபதியின் உறவினர்கள் கையால் மலம் அல்லும் பிரிவின் கீழும், எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் கணபதியின் உறவினர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினார். மேலும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையிடம் பேசுவதாக தெரிவித்ததை அடுத்து கணபதியின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Next Story