பாரம்பரிய உணவுத்திருவிழா
Tiruchengode King 24x7 |31 Aug 2024 8:10 AM GMT
பாரம்பரிய உணவுத்திருவிழா
திருச்செங்கோடு, வையப்பமலை கவிதா'ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அனைத்துத் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக பாரம்பரிய உணவுத்திருவிழா நடைபெற்றது. கல்லூரியின் தாளாளர் முனைவர் ப.செந்தில்குமார் விழாவை தொடங்கி வைத்து பாரம்பரிய உணவுகளை பற்றியும், அவற்றை உட்கொள்வதால் நூறாண்டு காலம் நோய் நொடியின்றி வாழலாம் என்று பாரம்பரிய உணவின் அவசியத்தை எடுத்துரைத்து, உணவுத் திருவிழாவில் பங்கு பெற்ற அனை வரையும் ஊக்குவிக்கும் விதமாக வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். கல்லூரியின் முதல்வர் ர.விஜயகுமார் பாரம்பரிய உணவுகளின் முக்கியத்துவத்தையும், அவற்றில் உள்ள சத்துக்களை பற்றியும் எடுத்துரைத்தார். பாரம்பரிய அரிசி வகைகளில் செய்யப்பட்ட உணவுகள், சிறு தானியங்களில் செய்யப்பட்ட தோசை,இட்லி மற்றும் இனிப்பு வகைகள், தூதுவளை, பிரண்டை உள்ளிட்ட மூலிகைகளில் செய்யப்பட்ட உணவுகள் பாரம்பரிய உணவுத்திருவிழாவில் சிறப்பிடம் பெற்றிருந்தன. பாரம்பரிய உணவுத்திருவிழாவை, அனைத்துத் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணாக்கர்கள் ஒருங்கிணைந்து ஏற்ப்பாடு செய்திருந்தனர்.
Next Story