காக்கங்கரை ரயில் நிலையம் அருகில் உள்ள கேட்டின் மீது விவசாய டிராக்டர் மோதி விபத்து

காக்கங்கரை ரயில் நிலையம் அருகில் உள்ள கேட்டின் மீது விவசாய டிராக்டர் மோதி விபத்து
காக்கங்கரை ரயில் நிலையம் அருகில் உள்ள கேட்டின் மீது விவசாய டிராக்டர் மோதி விபத்து
திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை ரயில் நிலையம் அருகில் உள்ள கேட்டின் மீது விவசாய டிராக்டர் மோதி விபத்து திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மாங்குட்டை பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் விவசாயி இவர் திருப்பதி என்பவருக்கு சொந்தமான டிராக்டர் பின்பக்க கலப்பை உடைந்திருந்த காரணத்தால் அதனை சரி செய்ய காக்கங்கரை பகுதிக்கு டிராக்டரை எடுத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது காக்கங்கரை ரயில்வே நிலையம் அருகே டிராக்டரில் டீசல் காலியாக நின்றது. அதனை பம்ப்பு அடித்து ஸ்டார்ட் செய்ய முயற்சித்த போது திடீரென ஸ்டார்ட தேவேந்திரன் மீது டிராக்டர் ஏரி இறங்கி காக்கங்கரை ரயில்வே தண்டவாளத்தில் நின்றது. இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தேவேந்திரனை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கேட் கீப்பர் திருப்பத்தூர் ரயில்வே போலீசாருக்கு கொடுத்த தகவலின் பெயரில் விரைந்து வந்து தண்டவாளத்தில் நின்ற டிராக்டரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டனர். இதன் காரணமாக சில மணி நேரம் போராடி தண்டவாளத்தில் நின்ற டிராக்டர் அப்புறப்படுத்தினர். எனவே அவ் வழியாக செல்லும் சகாப்தி விரைவு ரயில் இன்டர்சிட்டி இரு ரயில்கள் 20 நிமிடம் தாமதமாக சென்றது குறிப்பிடத்தக்கது.
Next Story