வந்தே பாரத் ரயிலுக்கு வரவேற்பு தெரிவித்த காங்கிரஸ்
Karur King 24x7 |31 Aug 2024 12:40 PM GMT
வந்தே பாரத் ரயிலுக்கு வரவேற்பு தெரிவித்த காங்கிரஸ்
வந்தே பாரத் ரயிலுக்கு வரவேற்பு தெரிவித்த காங்கிரஸ் & பிஜேபி கட்சியினர். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மூன்று வந்தே பாரத் ரயில்களை காணொளி காட்சி வாயிலாக கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் ஒரு ரயில் மதுரையில் இருந்து கரூர் வழியாக பெங்களூர் செல்லும் ரயிலாகும். இந்த ரயில் இன்று மதியம் 3:45- மணி அளவில், கரூர் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, கரூர் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் ஆகியோர் தனித்தனியாக நின்று வந்தே பாரத் ரயிலை மலர்கள் தூவி வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ-மாணவிகள், காவல்துறையினர், அரசியல் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் ரயில் நிலையத்தில் குவிந்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வந்தே பாரத் ரயிலுக்கு எம்பி ஜோதிமணி பச்சைக் கொடி அசைத்து ரயிலை அனுப்பி வைத்தார். இந்த ரயிலில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் பயணித்து சென்றார்.
Next Story