கரடிவாவி ஊராட்சிக்கு வழங்கப்பட்ட வாகனங்கள் தனிநபர் பெயரில் பதிவு

X
பல்லடத்தை அடுத்துள்ள கரடிவாவி ஊராட்சியின் பயன்பாடு கருதி தன்னார்வலர்கள் பொதுமக்களால் ஏராளமான பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.தனியார் நிறுவனங்கள் சார்பில் இருசக்கர வாகனங்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்டவையும் ஊராட்சியின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டுள்ளன.இந்த வாகனங்களில் கரடிவாவி ஊராட்சி என பெயர் எழுதப்பட்டுள்ள நிலையில் இவை அனைத்தும் தனிநபர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்லடம் தாலுகா சமூக ஆர்வலர் கூட்டமைப்பினர் பி டி ஓ மனோகரிடம் மனு அளித்தனர்.
Next Story

