வக்கம்பட்டி அருகே திருமண ஏக்கத்தில் கூலித்தொழிலாளி தற்கொலை

வக்கம்பட்டி அருகே திருமண ஏக்கத்தில்  கூலித்தொழிலாளி தற்கொலை
வக்கம்பட்டி அருகே திருமண ஏக்கத்தில் கூலித்தொழிலாளி தற்கொலை
திண்டுக்கல் வக்கம்பட்டி அடுத்த மைக்கேல்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் நடராஜன் மகன் சதீஷ்குமார் (வயது 25). கூலிதொழிலாளி. இவரது தந்தை பல இடங்களில் சதீஷ்குமாருக்கு பெண் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்னும் திருமணம் ஆகவில்லையே என்ற விரக்தியில் இருந்த சதீஷ்குமார் இன்று வீட்டின் அருகே உள்ள புங்க மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அருண் நாராயணன் தலைமையில் ஏட்டு நல்லுசாமி, தனபால் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story