காவிரி கரையில் ஒரு கோடி பனை விதைகள்- பனை விதைகள் சேகரிக்கும் பணியை துவக்கி வைத்தார் ஆட்சியர் தங்கவேல்.
Karur King 24x7 |1 Sep 2024 8:43 AM GMT
காவிரி கரையில் ஒரு கோடி பனை விதைகள்- பனை விதைகள் சேகரிக்கும் பணியை துவக்கி வைத்தார் ஆட்சியர் தங்கவேல்.
காவிரி கரையில் ஒரு கோடி பனை விதைகள்- பனை விதைகள் சேகரிக்கும் பணியை துவக்கி வைத்தார் ஆட்சியர் தங்கவேல். தமிழக மாநில மரமான தமிழர்களின் வாழ்வியலோடு நெருங்கிய உறவு உடைய பராமரிப்பு இல்லாமலேயே காலத்துக்கும் பயன் தரும் பனை மரத்தை அறியாமல் பாதுகாக்கவும் இளைஞர்களிடம் படையின் சிறப்பை கொண்டு செல்லும் விதமாகவும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு தமிழ்நாடு பசுமை இயக்கம் இணைந்து ஒருங்கிணைந்து காவிரி கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி ஜூலை மாதம் 27ஆம் தேதி ராமேஸ்வரத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மைய நாதன் தலைமையில் துவங்கியது இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் வரும் 21 ஆம் தேதியன்று காவிரி கரையோர பகுதிகளில் பனை விதைகள் நடும்பனி துவக்கப்பட உள்ளது. இதற்காக பனை விதைகள் மாவட்டம் முழுவதும் சேகரிக்கும் பணிகள் நடைபெற உள்ளதை முன்னிட்டு, இன்று கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், பாலபடுதி ஊராட்சி குரும்பபட்டியில் பனை விதைகள் சேகரிக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், கிரீன் மீடியா சுற்றுச்சூழல் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு, கரூர் விதைகள் அறக்கட்டளை சந்துரு, கரூர் மாவட்ட முதலமைச்சரின் பசுமை தோழர் கோபால், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், சுரேஷ்குமார், வட்டாட்சியர் இளம்பருதி மற்றும் வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்
Next Story