வந்தேபாரத் ரயிலை பிரதமர் காணொளிகாட்சி மூலம் துவக்கி வைத்தார்
Dindigul King 24x7 |1 Sep 2024 11:40 AM GMT
மதுரை- பெங்களூர் புதிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்த நிலையில் திண்டுக்கல் ரயில் நிலையம் வந்த ரயிலுக்கு வர்த்தகர் சங்கம், பாஜகவினர், பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் உற்சாக வரவேற்பு.
பல்வேறு வழித்தடங்களில் ஆகஸ்ட் 31 வந்தே பாரத் ரயில் சேவையை பாரத பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதில் மதுரை-பெங்களூர் வழித்தடத்தில் புதிய வந்தே பாரத் ரயில் சேவையானது துவங்கப்பட்டது. இந்நிலையில் மதுரை ரயில் நிலையத்திலிருந்து கிளம்பி திண்டுக்கல் ரயில் நிலையம் வந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தாரை தப்பாட்டம் முழங்க பொதுமக்கள் பாஜகவினர் பள்ளி மாணவ மாணவிகள் என நூற்றுக்கணக்கானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் ரயில் ஓட்டுநர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தனர். பின்னர் அனைவரும் உற்சாகமாக கைகாட்டி வந்தே பாரத் ரயிலை வழி அனுப்பி வைத்தனர். இன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், பாஜகவினர், ரயில்வே துறை அதிகாரிகள், பள்ளி மாணவ மாணவிகள், வணிகர் சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
Next Story