ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா

ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா
திண்டுக்கல்லில் மாநில அளவிலான ஹாக்கி போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா
திண்டுக்கல்லில் 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டி பரிசளிப்பு விழா நடந்தது. திண்டுக்கல் பட்டேல் ஹாக்கி அகாடமி மற்றும் மாவட்ட ஹாக்கி சங்கம் இணைந்து 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டி - 2024 திண்டுக்கல் ஆர்.வி.நகர் மலைக்கோட்டை ஹாக்கி மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஹாக்கி போட்டியில் முத்தழகுபட்டி புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளி ( எ) அணியினர் முதல் இடத்தையும், மணப்பாறை தியா கேசர் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தையும், திண்டுக்கல் புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளி (பி) அணியினர் மூன்றாவது இடத்தையும், வாடிப்பட்டி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி நான்காம் இடத்தையும் பிடித்தனர். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் நாட்டாண்மை என்.எம்.பி. காஜாமைதீன் தலைமை தாங்கி வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பை வழங்கினார். இந்நிகழ்வில் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, பட்டேல் ஹாக்கி அகாடமி செயலாளர் வி.ஞானகுரு, மாவட்ட ஹாக்கி சங்க துணைத் தலைவர் திபூர்சியஸ், திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா, மாநகர கிழக்குப் பகுதி திமுக செயலாளர் ராஜேந்திரகுமார், காந்திகிராம உடற்பயிற்சி இயக்குனர் சுகுமார், சமூக ஆர்வலர் கே.சாதிக், ஹாக்கி பயிற்சியாளர் பார்த்தசாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட ஹாக்கி சங்க ஒருங்கிணைப்பாளர் பி.சதீஷ்கண்ணா நன்றி கூறினார்.
Next Story