விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரசு ஊழியர் ஐக்கிய பேரவையின் சார்பில் பட்டியல் மற்றும் பழங்குடி மக்கள் வகுப்பினருக்கு பதவி உயர்வு இட ஒதுக்கீடு கேட்டு ஆட்சியர் இடம் மனு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரசு ஊழியர் ஐக்கிய பேரவையின்  சார்பில் பட்டியல் மற்றும் பழங்குடி மக்கள் வகுப்பினருக்கு பதவி உயர்வு இட ஒதுக்கீடு கேட்டு ஆட்சியர்  இடம் மனு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரசு ஊழியர் ஐக்கிய பேரவையின் சார்பில் பட்டியல் மற்றும் பழங்குடி மக்கள் வகுப்பினருக்கு பதவி உயர்வு இட ஒதுக்கீடு கேட்டு நாமக்கல் ஆட்சியர் இடம் மனு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரசு ஊழியர் ஐக்கிய பேரவையின் சார்பாக இந்திய அரசமைப்பு சட்டப்பிரிவு பயன்படுத்தி பட்டியல் மற்றும் பழங்குடி மக்கள் வகுப்பினருக்கு பதவி உயர்வு இட ஒதுக்க கேட்டு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் இடம் மனு வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரசு ஊழியர் ஐக்கிய பேரவையின் சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 16 (4 )A வை பயன்படுத்தி பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்க தமிழ்நாடு அரசு தனி சட்டம் இயற்ற வலியுறுத்தி பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்பட வேண்டிய பின்னடைவு காலி பணியிடங்கள் சுமார் 11,000 பணியிடங்கள் நிரப்ப வேண்டும், பழைய ஓய்வு திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும் தூய்மை பணியாளர்கள் தமிழக அரசு நேரடியாக நியமனம் செய்ய வேண்டும் ,தந்தை பெரியார் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மற்றும் கருத்தியல் வாரிசு தான் திராவிட மாடல் அரசு என்பதை தமிழகத்தில் உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொண்டு, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.நிகழ்வில் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை நாமக்கல் மாவட்ட தலைவர் சுப்பிரமணி, நாமக்கல் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், நாமக்கல் மாவட்ட பொருளாளர் மணி, நாமக்கல் மாவட்ட துணை தலைவர் செந்தில், நாமக்கல் மாவட்ட துணை செயலாளர் சுரேஷ், நிர்வாக குழு உறுப்பினர்கள் தசரதன், ராஜா ,முருகேசன் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
Next Story