எடப்பாடியில் அறுபத்து மூவர் நாயன்மார்கள் பெருவிழாவில்
Edappadi King 24x7 |1 Sep 2024 5:32 PM GMT
எடப்பாடியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவில் அறுபத்து மூவர் நாயன்மார்கள் பெருவிழாவில் பம்பை, தாரை, கைலாய மேளதானங்கள் முழங்க சுவாமி ஊர்வலம் வெகு சிறப்பாக நடைபெற்றது..
சேலம் மாவட்டம் எடப்பாடியில் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை சார்பாக பிரசித்திப்பெற்ற அருள்மிகு தேவகிரி அம்மன் உடனமர் அருள்மிகு பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள அறுபத்து மூவர் நாயன்மார்களின் ஆண்டு விழா கடந்த மூன்று நாட்களாக சிறப்பாக நடைப்பெற்றது. இறுதி விழாவாக 63 நாயன்மார்களின் சிலைகளுக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பம்பை, தாரை, கைலாய வாத்தியங்கள் முழங்க அருள்மிகு பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் தொடங்கி கடைவீதி, அங்காளம்மன் கோவில் தெரு, திரெளபதி அம்மன் கோவில் தெரு மேட்டுத்தெரு, பவானி சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக மீண்டும் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலை வந்தடைந்தனர். அப்போது மாணவ மாணவிகள் சிலம்பம் சுற்றிக்கொண்டே ஊர்வலமாக வந்த காட்சியும், சிவனடியார் மேளத்திற்கு ஏற்ப சில பெண்கள் ஆட்டம் ஆடிக்கொண்டே சென்ற இக்காட்சி வியப்பாக இருந்தது. இந்த 63 நாயன்மார்களின் சுவாமி ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.
Next Story