மின்தடை அறிவித்த வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர்

மின்தடை அறிவித்த வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர்
மின்தடை
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன் அரசு மின்தடை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூடங்குளம், பணகுடி மற்றும் திசையன்விளை துணை மின் நிலையங்களில் நாளை 03.09.2024 மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட உபமின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கூடங்குளம், இடிந்தகரை, இருக்கன்துறை, பொன்னார்குளம், விஜயாபதி, ஆவுடையாள்புரம், தோமையார்புரம், சங்கனேரி, வைராவி கிணறு, தாமஸ் மண்டபம் ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பணகுடி, லெப்பைகுடியிருப்பு, புஷ்பவனம், குமந்தான், காவல்கிணறு, சிவகாமிபுரம், தளவாய்புரம், பாம்பன்குளம், கலந்தபனை, கடம்பன் குளம். திசையன்விளை, மகாதேவன் குளம், இடையன்குடி, அப்புவிளை, ஆனைகுடி, முதுமொத்தான் மொழி ஆகிய பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story