மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (02.09.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே வந்து கோரிக்கை மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், 02 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தலா ரூ.9,000 மதிப்பிலான சக்கர நாற்காலியினை வழங்கினார். பின்னர், ஆலத்தூர் வட்டம் தெரணி கிராமத்தைச் சேர்நத தமிழரசன் என்பவர் 14.04.2022 அன்று பாம்பு கடித்து இறந்ததை தொடர்ந்து, அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் ரூ.1,00,000க்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக் கூலி உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம், அடிப்படை வசதிகள் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவற்றை நிறைவேற்றுவதற்கு அரசு அலுவலர்கள் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து 354 மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story