மகன் வீட்டை விட்டு துரத்தியதாக தாய் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்
Villuppuram King 24x7 |3 Sep 2024 3:41 AM GMT
ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட தாய்
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நேற்று நடந்தது.மதியம் 12:00 மணியளவில் மனு அளிக்க வந்த வயதான பெண் கலெக்டர் அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.பாதுகாப்பு பணியிலிருந்த, போலீசார், அந்த பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், விழுப்புரம் அடுத்த மேல்வாலையைச் சேர்ந்த அல்லிமுத்து மனைவி கமலா, 58; என தெரிய வந்தது.அப்போது அவர் கூறியதாவது:எங்கள் கிராமத்தில், எனக்குச் சொந்தமாக விவசாய நிலம் 2 ஏக்கர் 55 சென்ட் உள்ளது. அதனை, எனது மகன் அறிவுச்செல்வம், அந்த நிலத்தை அவரது பெயருக்கு தான சென்டில்மெண்ட் செய்துகொண்டார். அதன்பிறகு, அவர் என்னை வீட்டை விட்டு விரட்டி விட்டார். இது குறித்து நடவடிக்கை எடுத்து, சொத்தை மீட்டுத்தர வேண்டும் என கூறினார். இதனையடுத்து, போலீசார் அறிவுறுத்தியதன் பேரில், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
Next Story