கரைபாளையத்தில் டூவீலர் மீது கார் மோதி விபத்து. முதியவர் படுகாயம்.
Karur King 24x7 |3 Sep 2024 3:54 AM GMT
கரைபாளையத்தில் டூவீலர் மீது கார் மோதி விபத்து. முதியவர் படுகாயம்.
கரைபாளையத்தில் டூவீலர் மீது கார் மோதி விபத்து. முதியவர் படுகாயம். திருப்பூர் மாவட்டம், காங்கேயம், முத்தூர் அருகே உள்ள மூல கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சென்னியப்பன் வயது 70. இவர் செப்டம்பர் 1-ம் தேதி காலை 11:45 மணியளவில், கரூர்- கோவை சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் கரூர் மாவட்டம், தென்னிலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கரைப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, எதிர் திசையில் நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள ஒருவந்தூர், பாவாடை தெருவை சேர்ந்த சுரேஷ் வயது 43 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார், சென்னியப்பன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்துடன் தூக்கி வீசப்பட்ட சென்னியப்பனுக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த சென்னியப்பனின் மனைவி செல்வமணி வயது 60 என்பவர் அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தென்னிலை காவல்துறையினர்.
Next Story