விராலிமலையில் தெரு நாய்கள் தொல்லை!

விராலிமலையில் தெரு நாய்கள் தொல்லை!
பொது பிரச்சனைகள்
விராலிமலை நகர் பகுதிகளில் சுற்றித் திரியும் நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விராலிமலை நகரப் பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை சமீபகாலமாக அதிகரித்துள்ளது. விராலிமலை அம்மன் கோவில் வீதி, கடைவீதி, சோதனை சாவடி, யூனியன் சாலை, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரப் பகுதிகளில் இரவு 11 மணிக்கு மேல் காலை 9 மணி வரை பிரதான சாலைகளில் மக்கள்நடந்து செல்ல முடியாத அளவுக்கு நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் காலை நடைப்பயிற்சி செல்லும் பொதுமக்கள், பள்ளிக் குழந்தைகள் தெரு நாய்களைப் பார்த்து அச்சமடைவதால் சாலைகளைக் கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். தெரு நாய்கள் கூட்டமாகத் திரிவதற்கு, பெரும்பாலான சாலையோர அசைவ உணவகங்கள் முன்பு கழிவுகள் கொட்டப்படுவது காரணமாகக் கூறப்படுகிறது. எனவே, உள்ளாட்சி நிர்வாகம்,விலங்கின கால்நடை ஆர்வலர்கள், துறையினருடன் இணைந்து தெருவில் சுற்றித் திரியும் நாய்களைப் பிடித்து கருத்தடை செய்ய வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
Next Story