போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் திருச்சியில் கைது

போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த  நபர் திருச்சியில் கைது
திண்டுக்கல்லில் போக்சோ வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த நபர் திருச்சியில் கைது
திண்டுக்கல் அருகே காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்த சேசுராஜ் வயது 24 இவரை தாலுகா காவல்துறையினர் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்த சேசுராஜ் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 2 வருடங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் திண்டுக்கல் நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் அருண்நாராயணன், சிறப்பு சார்பு ஆய்வாளர் தர்மா, காவலர்கள் மணி, காளீஸ்வரன், விமல்ராஜ் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு திருச்சியில் தலைமறைவாக பதுங்கியிருந்த சேசுராஜுவை கைது செய்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்
Next Story