சமுதாயஅமைப்பாளர் பணிக்கு தகுதியுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்
Dindigul King 24x7 |3 Sep 2024 7:35 AM GMT
சமுதாய அமைப்பாளர் பணிக்கு தகுதியுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தகவல்
தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தில் உள்ள சமுதாய அமைப்பாளர் காலிப்பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் வெளிப்பணி நிறுவனம் மூலம் பணி அமர்வு செய்திட தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சமுதாய அமைப்பாளர் பணிக்கு திண்டுக்கல் மாநகராட்சியில் ஒரு பணியிடம், மாதச்சம்பளம் ரூ.16,000, கொடைக்கானல் நகராட்சியில் ஒரு பணியிடம் மாதச்சம்பளம் ரூ.15,000, பேரூராட்சிகள்(தாடிக்கொம்பு மற்றும் சின்னாளப்பட்டி) ஒரு பணியிடம் மாதச்சம்பளம் ரூ.14,000 என்ற வகையில் நிரப்பப்படவுள்ளது. இந்தப் பணிக்கு கல்வித்தகுதி ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மற்றும் கணினி இயக்கத்தில் அடிப்படை தகுதிகளை(MS Office) பெற்றிருக்க வேண்டும். வயது 01.07.2024-ஆம் தேதிப்படி 35 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். களப்பணியில் ஓராண்டு முன்அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும். கட்டாயம் கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும். வட்டார அளவிலான கூட்டமைப்பு(ALF)-ல் உறுப்பினராக இருத்தல் வேண்டும். ALF -ல் கடிதம் வாங்கி வர வேண்டும். சம்மந்தப்பட்ட ALF -லிருந்து தீர்மானம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். திட்டங்களை பற்றி தகவல் பரிமாற்றம் செய்வதற்கு திறமை உடையவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இரு சக்கர வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்திற்குள் வசிப்பவராக இருக்க வேண்டும். ALF - ஆரம்பித்து 2 வருடங்களுக்கும் மேல் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். நிர்வாகம் மற்றும் நிதி முறைகேடுகள் காரணமாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், புது வாழ்வு திட்டம் போன்ற திட்டங்களிலிருந்து நிறுத்தப்பட்டிருக்கவே அல்லது அகற்றப்பட்டிருக்கவே கூடாது. விண்ணப்பங்கள் நகர்ப்புற வாழ்வாதார மையத்தில் நேரடியாகவும், www.dindigul.nic.in என்ற வலைதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நகர்ப்புற வாழ்வாதார மையத்தில் 09.09.2024- ஆம் தேதி மாலை 05.45 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
Next Story