ஊரக வளர்ச்சி திட்டங்கள்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு!
Thoothukudi King 24x7 |3 Sep 2024 10:15 AM GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு நடத்தினார்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (03.09.2024) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், முன்னிலையில் கூடுதல் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ககன்தீப் சிங் பேடி. தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக, மகளிர்சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்கள் கண்காட்சியினையும், வாழ்ந்துகாட்டுவோம் திட்டம் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள உற்பத்தி பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சி ஆகியவற்றினை கூடுதல் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ககன்தீப் சிங் பேடி. பார்வையிட்டார். ஊரக வீடுகள் வழங்கும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் உள்@ர் பகுதி மேம்பாட்டு திட்டம், நமக்கு நாமே திட்டம், குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், அரசுப் பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு மற்றும் ஒட்டு மொத்த தூய்மைக்கு புத்துயிர் அளித்தல் திட்டம், ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் கூறுநிதி, சாலைகள் மற்றும் பாலங்கள், தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்),15வது மத்திய நிதிக்குழு மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்து கூடுதல் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ககன்தீப் சிங் பேடி, ஆய்வு செய்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா கூடுதல் இயக்குனர்கள் ஊரக வளர்ச்சித்துறை சென்னை ஆர்.ராஜஸ்ஸ்ரீ , எஸ்.எஸ்.குமார் , கே.சுமதி , அப்துல் ராசிக் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊரக வளர்ச்சி பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story