கரூரில் பிஜேபி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி துவங்கியது.

கரூரில் பிஜேபி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி துவங்கியது.
கரூரில் பிஜேபி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி துவங்கியது. வரும் 2026 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு இப்போது இருந்தே தயாராக வேண்டும் என தேர்தலில் போட்டியிட உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் முடிவு எடுத்து செயலாற்றி வருகிறது. இதன் அடிப்படையில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை திருவிழா தேசிய அளவில் நேற்று மாலை டெல்லியில் தொடங்கியது. அதில் முதல் உறுப்பினராக பிரதமர் நரேந்திர மோடி உறுப்பினராக இணைந்தார். இதன் தொடர்ச்சியாக கரூர் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை கூட்டம் துவங்கியது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கேபி ராமலிங்கம் கலந்து கொண்டு கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில மகளிர் அணி தலைவி மீனா, கட்சியின் மாவட்ட பார்வையாளர் சிவசுப்பிரமணியன், மாவட்ட பொது செயலாளர் ஆறுமுகம், சக்திவேல், மாவட்டச் செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களை உறுப்பினராக இணைத்துக் கொண்டனர். உறுப்பினராக இணைந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம்.
Next Story