தலைமையாசிரியர் தாக்கியதால் மாணவன் காயம் : ஆத்திரமடைந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதம்
Tiruvallur King 24x7 |3 Sep 2024 3:47 PM GMT
பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்புமாணவனை தலைமையாசிரியர் தாக்கியதால் மாணவன் காயம் : ஆத்திரமடைந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தலைமை ஆசிரியை பணி மாற்றம் செய்யப்படும் வரை மாணவ மாணவியர்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என கூறி பள்ளியில் இருந்து மாணவர்களை அழைத்துச் சென்றனர்
பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்புமாணவனை தலைமையாசிரியர் தாக்கியதால் மாணவன் காயம் :ஆத்திரமடைந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தலைமை ஆசிரியை பணி மாற்றம் செய்யப்படும் வரை மாணவ மாணவியர்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என கூறி பள்ளியில் இருந்து மாணவர்களை அழைத்துச் சென்றனர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள காட்டாவூர் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவன் கிரண் என்ற சிறுவனை அடித்து சுவற்றில் தள்ளி தாக்கியதால் காயம் அடைந்து முகம் வீங்கியதால் கிராம மக்கள் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். தகவல் அறிந்து வந்த 108 ஆம்புலன்சு மூலம் பொன்னேரி அரசு மருத்துவ மனையில் மாணவர் சிகிச்சைக்கு அழைத்துக் கொண்டு செல்லப்பட்டு சேர்க்கைப்பட்டார். பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு தங்களது குழந்தைகளை வீடுகளுக்கு அழைத்து சென்றனர். பள்ளியின் கேட்டை மாணவன் கிரன் மூடிய போது பள்ளி தலைமை ஆசிரியர் உஷாராணி பள்ளிக்கு வந்துள்ளார் அதனால் கோபம் அடைந்த அவர் மாணவனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது இதனிடையே பொன்னேரி காவல்துறையினர் பெற்றோர்களிடம் கூறிய சமரசத்தையும் ஏற்காமல் பொதுமக்கள் குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்துச் சென்றதுடன் பள்ளி தலைமை ஆசிரியை மாற்றும் வரை பள்ளிக்கு மீண்டும் மாணவர்களை அனுப்ப மாட்டோம் என தெரிவித்தனர்.
Next Story