தேசிய ஊட்டச்சத்து வார விழா கண்காட்சியை ஆட்சியர் தங்கவேல் துவக்கி வைத்தார்.
Karur King 24x7 |4 Sep 2024 9:09 AM GMT
தேசிய ஊட்டச்சத்து வார விழா கண்காட்சியை ஆட்சியர் தங்கவேல் துவக்கி வைத்தார்.
தேசிய ஊட்டச்சத்து வார விழா கண்காட்சியை ஆட்சியர் தங்கவேல் துவக்கி வைத்தார். மனிதர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை பராமரிக்க ஊட்டச்சத்தின் முக்கிய பங்கு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாக அனுசரிக்கப்படுகிறது. குழந்தைகள், வளர் இளம்பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரின் உடல் நலத்தை ரத்த சோகையிலிருந்து பாதுகாக்கவும், குழந்தையின் வளர்ச்சி கண்காணிப்பை ஒழுங்குப்படுத்தி அவர்களது ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதற்காகவும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகளின் சேவைகளை ஒளிவு மறைவின்றி மக்களுக்கு தெரிவிப்பதற்காகவும்,செப்டம்பர் மாதத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும்மான ஆரோக்கியமான உணவு பழக்கத்தை ஊக்குவிக்க ஊட்டச்சத்தின் ஆழமான தாக்கத்தை எடுத்துக் கட்டுவதற்காக,நாடு முழுவதும் உள்ள உணவு கலாச்சாரங்களின் வளமான பன்முகத்தன்மையை கொண்டாடுவதற்காகவும், இதன் கருப்பொருளை மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விளக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் இன்று கரூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய ஊட்டச்சத்து கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தார். இந்த கண்காட்சியில் பாரம்பரிய உணவு பதார்த்தங்கள் மற்றும் மனித உறுப்புகள் செயல்பாடுகள் குறித்தும், மனித உறுப்புகள் செயல்பாடுகளை உயிரோட்டமாக காட்சிப்படுத்தி, பல்வேறு உணவு வகைகளை காட்சிப்படுத்தியிருந்தனர். இதனை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கரூர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் அலெக்சாண்டர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனர் சுவாதி, ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள் குழுத்தலைவர் ஜாகிர் உசேன் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள், கல்லூரி- மாணவ மாணவியர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story