நெல்லில் குலை நோய் குறித்த ஆலோசனை கூட்டம்
Komarapalayam King 24x7 |4 Sep 2024 10:48 AM GMT
பள்ளிபாளையம் அருகே வேளாண்மைத்துறை சார்பில் நெல்லில் குலை நோய் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது
. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வேளாண்மைத்துறை சார்பில் நெல்லில் குலை நோய் குறித்த ஆலோசனை கூட்டம் வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயமணி தலைமையில் நடந்தது. பள்ளிபாளையம் வட்டாரத்தில் நெல் சம்பா பருவம் துவங்கியுள்ள நிலையில் விவசாயிகள் நாற்று விடும் பணியினை துவக்கியுள்ளனர். நெல் விதைப்பு செய்யும் முன் நெல் விதைகளை குடோமோனாஸ் புளூரசன்ஸ் என்ற பாக்டீரியா சுவையுடன், ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்து, விதைக்க வேண்டும்.இதனை அலமேடு ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இவ்வாறு விதை நேர்த்தி செய்யும் போது நெல்லில் பாதிப்பு ஏற்படுத்தும் பூஞ்சான நோய்களை குலை நோய், இலைபுள்ளி எனும் இலையுரை அழுகல் நோய் போன்றவை கட்டுப்படுத்த முடியும் என்பதால் விவசாயிகள் தவறாமல் விதை நேர்த்தி செய்ய வேண்டும். குடோமோனஸ் நமது வட்டார விரிவாக்க மையங்களில் 50% மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதில் வேளாண்மை அலுவலர் ரஞ்சித்ராஜ், துணை வேளாண்மை அலுவலர் மாயஜோதி, உதவி வேளாண்மை அலுவலர்கள் செல்வி, விஸ்வபிரியா, நிஷா உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story