நாமக்கல் புதிய பேருந்து நிலைய கடைகளின் பொது ஏலத்தினை மாநகராட்சி வெளிப்படையாக நடத்திட வேண்டும் -வணிகர் சங்கம் சார்பில் மாநகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் மற்றும் நிர்வாகிகள் நாமக்கல் மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரியை சந்தித்தனர்.
நாமக்கல் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுள்ள மகேஸ்வரி அவர்களை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், நாமக்கல் நகராட்சி கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் மாணிக்கம், நாமக்கல் மாவட்ட செல்போன் சேல்ஸ் & சர்வீஸ் அசோசியேசன் தலைவர் ராயல் பத்மநாபன் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து கூறினர்.இச்சந்திப்பில் வணிக உரிமத்தினை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தல் மற்றும் நகராட்சி கடைகளின் ஒப்பந்த காலத்தினை 12 ஆண்டுகள் நீட்டிக்கப்படுவது தொடர்பாக தமிழக முதல்வர் அறிவித்தது, நகர நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது உள்ளிட்ட விசயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் புதிய பேருந்து நிலைய கடைகளின் பொது ஏலத்தினை மாநகராட்சி வெளிப்படையாக நடத்திட வேண்டும் என வணிகர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கிவரும் அறிவுசார் மையம் மற்றும் நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்க முதல்கட்டமாக ரூபாய்.30,000 நன்கொடை வழங்குவதாகவும், நகர வளர்ச்சி மற்றும் வணிகர் நலன் சார்ந்து மாநகராட்சி முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு முழு ஒத்துழைப்பு வழங்கும் என உறுதியளிக்கப்பட்டது. இந்த சந்திப்பின்போது மாநகராட்சி துப்பரவு அலுவலர் திருமூர்த்தி, நாமக்கல் நகராட்சி கடை உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் கருணாகரன், பொருளாளர் முரளி, செல்போன் சேல்ஸ் & சர்வீஸ் அசோசியேசன் நகர தலைவர் ரிஸ்வான், செயலாளர் எவரெஸ்ட் ராஜா, பேரமைப்பின் மாவட்ட இணை செயலாளர் தேவி உதயகுமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் ராகவன், இளைஞர் அணி இணை அமைப்பாளர் மார்க்கெட் சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Next Story