தேங்காப்பட்டணம் கடற்கரையில் எஸ் பி ஆய்வு
Nagercoil King 24x7 |5 Sep 2024 12:47 PM GMT
விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை ) கொண்டாடப்படுகிறது. அன்று குமரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்து இயக்கங்கள் சார்பில் மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. மேலும் வீடுகள் கோயில்களிலும் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்படுகிறது. இப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்படும் விநாயகர் சிலைகள் வருகிற 13, 14, 15 ஆகிய தேதிகளில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, நீர் நிலைகளில் கரைக்கப்படுகிறது. இந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காப்பட்டணம் கடலில் முஞ்சிறை ஒன்றியத்திற்குட்பட்ட நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் வருடம் தோறும் கரைக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் மாவட்டத்தில் சிலைகள் கரைக்கும் பகுதிகளை கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் ஆய்வு செய்து வருகிறார். தேங்காப்பட்டணத்திலும் சிலைகளை கரைக்கும் கடற்கரை பகுதி, ஊர்வலமாக கொண்டு செல்லும் பகுதி போன்றவற்றை நேற்று ஆய்வு செய்து, பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது குளச்சல் ஏஎஸ்பி பிரவின் கவுதம், புதுக்கடை இன்ஸ்பெக்டர் ஜானகி உட்பட கலந்து கொண்டனர்.
Next Story