பெண் மாயம் போலீசில் புகார்

X
Komarapalayam King 24x7 |5 Sept 2024 7:50 PM ISTகுமாரபாளையத்தில் பெண் மாயமானதையடுத்து குமாரபாளையம் போலீசார் தேடி வருகிறார்கள்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பெண் மாயமானதையடுத்து குமாரபாளையம் போலீசார் தேடி வருகிறார்கள். இளம்பிள்ளை, கவுண்டம்பட்டியில் வசிப்பவர் சத்யா, 19. தனியார் மில் கூலி. இவர் உறவினரான ராஜேஸ்வரி, 18, என்பவரின் தாயாருக்கு உடல்நலமில்லால் இருந்ததால், அவரை கூட இருந்து 18 நாட்களாக கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்றுமுன்தினம் மதியம் 12:30 மணி முதல் இவர் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து ராஜேஸ்வரி குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
Next Story
