உடுமலையில் விநாயகர் சிலைகள் விற்பனை மந்தம்
Udumalaipettai King 24x7 |5 Sep 2024 2:34 PM GMT
விற்பனை யாகும் என எதிர்பார்ப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் வருகின்ற ஏழாம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் நிலையில் விநாயகர் சிலைகள் பல்வேறு வடிவங்களில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சாக்பவுடர்,தேங்காய் மஞ்சி கொண்டு அச்சில் வார்த்து சிலைகளை வடிவமைத்து வர்ணம்பூசி இறுதி வடிவம் கொடுத்து வருகின்றனர். வடிவமைக்கப்பட்டு உள்ள சிலைகள் கண்களை கொள்ளை கொள்ளும் அழகில் மனதை கவர்ந்து வருகிறது.ரூ 100 முதல் ரூ.10 ஆயிரம் வரையில் உயரத்திற்கு ஏற்ற வகையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உடுமலை பகுதியில் உள்ள சாலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது.பொதுமக்களும் விநாயகர் சிலைகளை ஆர்வத்தோடு வாங்கி செல்கின்றனர்.ஆனால் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு விற்பனை குறைவாக உள்ளதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் விற்பனை அதிகரித்து வாழ்வாதாரம் காப்பாற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்பிலும் தொழிலாளர்களும் உள்ளனர்.
Next Story