பண்டைய பழங்குடி மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிய வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன்

60 ஆண்டுகால கனவு நிறைவேறியது. இலவச வீட்டு மனைப்பட்டா மற்றும் ரூ.5.09 இலட்சம் மதிப்பில் வீடு கட்ட பணி ஆணை பெற்ற நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பண்டைய பழங்குடியின மக்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பெருமிதம்...
தமிழ்நாடு முதலமைச்சர் பழங்குடியின மக்களை கல்வி, சுகாதாரம், சுற்றுப்புற தூய்மை ஆகியவற்றில் அனைத்து மக்களுக்கு இணையாக உயர்த்தும் வகையிலும், அவர்களை அனைத்து நிலைகளிலும் வளர்ச்சியடைய செய்திடவும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். பழங்குடியின மக்களை கல்வி, பொருளாதாரம் மற்றும் சமுக நிலையில் உயர்வடைய செய்வதற்காக அவர்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பொருட்டு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் சட்டமன்ற தொகுதி, நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், உரம்பு பகுதியில் வசித்து வரும் பழங்குடியின மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில் இன்றைய தினம் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள், மாவட்ட ஆட்சியர் தலைமையில் மூலப்பள்ளிபட்டி, ஆயில்பட்டி, நாரைக்கிணறு மற்றும் மங்களபுரம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட பண்டைய பழங்குடியின மக்களுக்கான பெரும் திட்டத்தின் கீழ், 12 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் தலா ரூ.5.09 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளை வழங்கினார்.
Next Story