நாமகிரிப்பேட்டை அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

அறியாமை என்ற இருள் நீங்கி அறிவு என்னும் தீபம் ஏற்றும் ஆசிரியர் பெருமக்களுக்கு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், மங்களபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, வனத்துறை அமைச்சர் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, தலைமையில் ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்தார் பின்னர்ஆசிரியராக பணியை தொடங்கி நாட்டின் குடியரசு தலைவராக உயர்ந்த டாக்டர்.சர்வப்பள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினம் ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அறியாமை என்ற இருள் நீங்கி அறிவு என்னும் தீபம் ஏற்றும் ஒவ்வொரு ஆசிரியர் பெருமக்களையும் சிறப்பு செய்யும் வகையில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. மாணவர்களின் எதிர்காலத்தை கட்டமைப்பதில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது. நானும் மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி உள்ளேன் என்பதை இத்தருணத்தில் பெருமையுடன் நினைவு கூறுகிறேன். இன்றளவும் எனது மாணவர்கள் எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நமது வாழ்க்கையில் முக்கிய பங்காற்றி வரும் ஆசிரியர்களுக்கு இத்தருணத்தில் தங்கள் பணிகள் சிறக்க ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என வனத்துறை அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சிகளில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.இராமசுவாமி, உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story