செவாலியர் அகாடமி பள்ளியில் ஆசிரியர் தின விழா

செவாலியர் அகாடமி பள்ளியில் ஆசிரியர் தின விழா
திண்டுக்கல் செவாலியர் அகாடமி பள்ளியில் ஆசிரியர் தின விழா
திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது. பள்ளி தாளாளர் ஆரோக்கிய பிரபு தலைமை வகித்தார். டான் பாஸ்கோ இயக்குனர் ஜெரார்டு பிரிட்டோ சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிர்வாக அதிகாரி பாஸ்கர்ராஜ், அருட்தந்தை ஆண்டனி, சகோதரர் ஜான் லூக்காஸ், பள்ளி முதல்வர் ரோஸ்லின் ,துணை முதல்வர் ஞானசீலா உட்பட பலர் பங்கேற்றனர். இதில் சிறப்பு விருந்தினர் டான் பாஸ்கோ இயக்குனர் ஜெரார்டு பிரிட்டோ பேசியதாவது: உலகில் அனைத்து பதவிகளையும் உருவாக்கியவர்கள் ஆசிரியர்கள் தான். எனது பெற்றோரும் ஆசிரியர்கள் தான். ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது ஒரு 8,வயது சிறுவன் பசியோடு வாடிப்போய் நின்றான். அவனைப் பார்த்த ராணுவ வீரன் சிறுவன் பசியோடு இருக்கிறானே என்று அவனுக்கு உணவு கொடுத்தார். இதை வாங்கிய சிறுவன் தன்னைவிட முதியவர்கள் பசி தாங்க மாட்டார்கள். நான் இளமையாக இருக்கிறேன் பசி தாங்கிக் கொள்வேன் எனக் கூறி அந்த உணவை முதியோர்களுக்கு அளித்தான். இந்த மனித நேயத்தை அவனுக்கு சொல்லி தந்தது ஆசிரியர் தான். நம்மை செம்மைப்படுத்துபவர்கள் செதுக்குபவர்கள் ஆசிரியர்கள்தான். சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை நாம் ஆசிரியர் தினமாகக் கொண்டாடுவது சாலச் சிறந்தது. ஆசிரியர் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் நல்ல சமுதாயம் உருவாகும். நாளைய சமுதாயம் தலை நிமிர்ந்து நிற்கும் என்றார். பள்ளி தாளாளர் ஆரோக்கிய பிரபு பேசியதாவது: அனைத்து மாணவர்களின் அறிவை பட்டை தீட்டுவது ஆசிரியர்கள் தான். அவர்களை நம் கடவுளாக போற்ற வேண்டும். எத்தனையோ இன்ப துன்பங்களுக்கு நடுவில் நமக்கு நல்ல போதனைகளை சொல்லித் தருகிறார்கள். தனது துயரங்களை தாங்கிக் கொண்டு மாணவர்கள் துயரங்களை போக்குகிறார்கள். அவர்களின் சிறப்புகளை நாம் போற்ற வேண்டும், என்றார். அனைத்து ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர். பள்ளி மாணவ,மாணவியர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.
Next Story