கால்நடை மருந்தகம் (ம) அரசு துணை சுகாதார நிலையங்களில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
Perambalur King 24x7 |6 Sep 2024 1:53 AM GMT
அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் (ம) பாடாலூர் கிராமங்களில் கால்நடை மருந்தகம் (ம) அரசு துணை சுகாதார நிலையங்களில் அடிப்படை வசதிகள் (ம) மருத்துவ சேவைகள் குறித்து ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிறுவாச்சூர் அரசு துணை சுகாதார நிலையம் (ம) பாடாலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள், அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டார். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தில் மகப்பேறு பெண்களுக்கு வழங்கப்படும் அரசின் நலத்திட்ட உதவிகள் முறையாக வழங்கப்படுகின்றதா என்பது குறித்தும் கேட்டறிந்தார். மேலும், கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்கள் மக்கள் நல்வாழ்வு மையத்திற்கு வர இயலாத சூழ்நிலையில் உள்ள நோயாளிகளுக்கு வீட்டிற்கே சென்று மருத்துவ உதவிகளையும், உரிய மருத்துவ வழிகாட்டுதலையும் வழங்கிட மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, சிறுவாச்சூர் கால்நடை மருந்தகத்தை பார்வையிட்ட ஆட்சியர், கால்நடைகளுக்கு வழங்கப்படும் சேவைகள், கோமாரி நோய் தடுப்பு முறைகள், மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நலத்திட்டங்கள், கால்நடைகள், செல்லப் பிராணிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். பாடாலூர் கால்நடை மருந்தக கட்டடத்தில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்
Next Story