அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் அருவருக்கதக்க செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.- நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
Namakkal King 24x7 |6 Sep 2024 9:01 AM GMT
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது... நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமையலராக பணிபுரியும் கார்த்தீஸ்வரி மற்றும் கமலாபதி ஆகியோர் கடந்த செப்டம்பர் 2ந்தேதி காலை 06.45 மணியளவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமையல் செய்வதற்காக வந்த போது மேற்படி பள்ளியின் வளாகத்தில் உள்ள சமையலறையின் கதவு மற்றும் பூட்டில் அருகில் உள்ள சுவற்றில் அடையாளம் தெரியாத யாரோ அசிங்கமான வார்த்தைகளை எழுதியும், ஆபாசமான படங்களை வரைந்து அருவருக்கதக்க செயல்களை செய்துள்ளதைப் பார்த்து பள்ளியின் தலைமையாசிரியருக்கு தகவல் கூறியுள்ளனர். தலைமையாசிரியர் சம்பவ இடத்தில் நேரில் பார்வையிட்டு பின்பு எருமப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் எருமப்பட்டி காவல் நிலைய குற்ற எண். 126/2024, U/s. 292, 296(a), 79 BNS ஆக வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.இதுசம்மந்தமான புலன் விசாரணையில் எருமப்பட்டி பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் துரைமுருகன் (25) என்பவருக்கும் மேற்படி பள்ளியில் சமையலர்களாக பணிபுரிந்து வரும் கார்த்தீஸ்வரி மற்றும் கமலாபதி என்பவர்களுக்கும் இருந்த முன்விரோதம் காரணமாக அவர்களை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை (செப்டம்பர் -1) பள்ளி விடுமுறை என்பதால் காலை 06.00 மணிக்கு பள்ளியின் காம்பவுன்ட் சுவற்றை ஏறி குதித்து பள்ளியின் உள்ளே சென்று பள்ளியின் சமையலறை கதவு மற்றும் பூட்டில் அருவருக்கதக்க செயல்களை செய்தும், அருகில் கிடந்த சிகப்பு கலர் கிரயான் பென்சிலை எடுத்து அருகில் உள்ள சுவற்றில் ஆபாசமான வார்த்தைகளை எழுதியும், படத்தையும் வரைந்துள்ளது தெரிய வந்தது. அதன் அடிப்படையில், துரைமுருகன் என்பவரை விசாரித்ததில் அவர் இக்குற்றம் செய்ததை ஒப்புக் கொண்டுள்ளதையொட்டி. அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது போன்ற அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
Next Story