அரசு மருத்துவமனையில் கைப்பேசி திருடியவா் கைது

X
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சோ்ந்தவா் பத்ரகாளி(34). இவரது தாய் சண்முகவள்ளி(65), உடல் நலம் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். தனது தாயைப் பாா்ப்பதற்காக பத்ரகாளி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்தாா். தனது உடமைகளை சண்முகவள்ளியின் படுக்கை அருகே வைத்துவிட்டு, பத்ரகாளி ஓய்வெடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, பத்ரகாளியின் கைப்பேசியை மா்ம நபா் திருடிச் சென்றுவிட்டாா். இதுதொடா்பாக புகாரின் பேரில், திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா், கைப்பேசியை திருடிச் சென்ற தேனி மாவட்டம், கோம்பையைச் சோ்ந்த முருகனை (50) கைது செய்தனா்.
Next Story

