புத்தகங்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள் அது ஒருபோதும் உங்களுக்கு துரோகம் இளைக்காது. கரூரில் நடைபெற்ற தமிழ் ஆய்வு துறை கருத்தரங்கத்தில் முனைவர் கண்ணன் விளக்கம்.
Karur King 24x7 |6 Sep 2024 12:32 PM GMT
புத்தகங்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள் அது ஒருபோதும் உங்களுக்கு துரோகம் இளைக்காது. கரூரில் நடைபெற்ற தமிழ் ஆய்வு துறை கருத்தரங்கத்தில் முனைவர் கண்ணன் விளக்கம்.
புத்தகங்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள் அது ஒருபோதும் உங்களுக்கு துரோகம் இளைக்காது. கரூரில் நடைபெற்ற தமிழ் ஆய்வு துறை கருத்தரங்கத்தில் முனைவர் கண்ணன் விளக்கம். கரூர் அரசு கலைக் கல்லூரியில் தமிழாய்வுத்துறை சார்பில் "பேராயுதம்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் அலெக்சாண்டர் தலைமையில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில் தமிழ் ஆய்வு துறை இணை பேராசிரியர் கண்ணமுத்து, தேர்வு நெறியாளர் கற்பகம், இணை பேராசிரியர்கள் சரவணன், சுப்பிரமணி, கௌரவ விரிவுரையாளர் சுந்தரம், தமிழ் துறை கல்லூரி மாணவ- மாணவியர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த கருத்தரங்கத்தில் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி தமிழ் ஆய்வு துறை தலைவரும் இணை பேராசிரியருமான கண்ணன் சிறப்புரையாற்றினார். அப்போது, ர.சு. நல்லபெருமாள் எழுதிய "கல்லுக்குள் ஈரம்" என்ற ஒற்றைப் புத்தகம்தான் என்னை விடுதலை போராளியாக மாற்றியது என விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தெரிவித்தார் என்றால் புத்தகத்தில் எவ்வளவு ஆற்றல் உள்ளது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், போர்க்களத்தில் துப்பாக்கியை விட வலிமையானது புத்தகம் என ரஷ்ய புரட்சியாளர் லெனின் தெரிவித்ததை மேற்கோள் காட்டினார். எழுத்தும், எழுதுகோலும் நாம் வணங்கும் தெய்வம் என நமக்கு வழிகாட்டினார் பாரதி என்றும், படிக்காமல் இருப்பதைவிட பிறக்காமல் இருக்கலாம் என்று சாக்ரடீஸ் சொன்னதையும் மேற்கோள் காட்டினார். மேலும், புத்தகங்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள் அவை ஒருபோதும் உங்களுக்கு துரோகம் இழைக்காது என இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார் சொன்னதை மேற்கோள் காட்டி பேசிய கருத்துக்களால் அனைவரையும் கவர்ந்தார்.
Next Story