மோகனூரில் பேக்கரி கடையை திறந்து வைத்த வணிகர் சங்க தலைவர்!
Namakkal King 24x7 |6 Sep 2024 12:46 PM GMT
மெட்ராஸ் பேக்ஸ் என்னும் பேக்கிரி நிறுவனத்தின் 13-வது கிளையை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்
மோகனூர் பஸ்நிலையம் அருகே மெட்ராஸ் பேக்ஸ் என்னும் பேக்கிரி நிறுவனத்தின் 13-வது கிளையை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.இந்த நிகழ்வில் மோகனூர் அனைத்து வணிகர் சங்க தலைவர் நடராஜன் மற்றும் சோமசுந்தரம் சாரங்கபாணி, சங்க உறுப்பினர்கள் உடன் இருந்தனர், முதல் விற்பனையை ஜெயக்குமார் வெள்ளையன் துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வா்த்தக சங்க நிா்வாகிகள், உணவக உரிமையாளா் சங்க நிா்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். திறப்பு விழா சலுகையாக வருகிற திங்கட்கிழமை வரை டீ 5 ரூபாய்க்கும், காபி 10 ரூபாய்க்கும் வழங்கப்படும் என்று நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
Next Story