திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்க அழைப்பிதழ்
Rasipuram King 24x7 |8 Sep 2024 12:00 PM GMT
திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்க அழைப்பிதழ்
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கம் வருகிற 10 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணிக்கு அளவில் நாமக்கல் நளா ஹோட்டலில் நடைபெற உள்ளது. இக்கருத்தரங்கிற்கு நாமக்கல் மாநகராட்சி மேயர் து.கலாநிதி வரவேற்புரை ஆற்றுகிறார். நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தலைமையில் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.இராமலிங்கம் கே.பொன்னுசாமி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறுகிறது. உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி துவக்கி வைக்கிறார் திமுக கொள்கை பரப்புச் செயலாளரும், நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான திருச்சி சிவா சிறப்புரை ஆற்ற உள்ளார். இந்நிகழ்ச்சியில் நகைச்சுவை முனைவர் கு.ஞானசம்பந்தன், திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். முன்னதாக காலை 9.30 மணிக்கு தென்றல் நடன குழு வழங்கும் கலைஞரின் குறளோவியம் நாட்டிய நாடகம் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் திமுக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், திமுக தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிகழ்ச்சிக்கான அழைப்புகளை நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சி.விஸ்வநாத் ஆலோசனையின் பேரில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம் கார்த்திக் தலைமையில் இளைஞர் அணி நிர்வாகிகள் வெண்ணந்தூர் ஒன்றியத்தில் வெண்ணந்தூர், அத்தனூர் ஆகிய பேரூர்களில் அத்தனூர் பேரூர் கழக செயலாளர் கண்ணனிடம் வழங்கினர்
Next Story