வேளாண் விரிவாக்கம் மையத்தில் பணம் இல்லா பரிவர்த்தனை நாளை முதல் துவக்கம்.
Karur King 24x7 |8 Sep 2024 12:06 PM GMT
வேளாண் விரிவாக்கம் மையத்தில் பணம் இல்லா பரிவர்த்தனை நாளை முதல் துவக்கம்.
வேளாண் விரிவாக்கம் மையத்தில் பணம் இல்லா பரிவர்த்தனை நாளை முதல் துவக்கம். கரூர் மாவட்டம், க.பரமத்தி வட்டார வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் பணமில்லா பரிவர்த்தனை நாளை முதல் தொடங்கப்பட உள்ளது. இது தொடர்பாக க.பரமத்தி வட்டார வேளாண்மை விரிவாக்கம் மைய உதவி இயக்குனர் கலைச்செல்வி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் வருவாய் துறை, பத்திரப்பதிவு துறையில் உள்ளது போல வேளாண்மை துறையிலும் மின்னணு பரிவர்த்தனை செய்யும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் வட்டார வேளாண்மை விரிவாக்கம் மையங்களில் விவசாய இடு பொருட்களை வாங்கும் போது, ஏடிஎம் கார்டு, கூகுள் பே, பேடிஎம் மூலம் பணமில்லா பரிவர்த்தனை செய்யலாம் எனவும், க. பரமத்தி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நாளை முதல் பணமில்லாத பரிவர்த்தனை நடைமுறைக்கு வருகிறது எனவும், இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Next Story